தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரக உள்ளாட்சித்தேர்தல்: மறுசீரமைப்பு வாக்காளர் பட்டியல் வெளியீடு - மறுசீரமைப்பு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சித்தேர்தல்: மறுசீரமைப்பு வாக்காளர் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சித்தேர்தல்: மறுசீரமைப்பு வாக்காளர் பட்டியல் வெளியீடு

By

Published : Aug 31, 2021, 7:03 PM IST

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இத்தேர்தலை நடத்துவதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியான வாக்காளர் பட்டியலைத்தயாரிக்கும் பணியில் மாநிலத்தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டது.

பட்டியல் வெளியீடு:

கடந்த மார்ச் 19ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் தயாரித்து வெளியிட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் புதிதான சீரமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டம்தோறும் மாவட்ட ஆட்சியர்(தேர்தல் நடத்தும் அலுவலர்கள்) மூலமாக விடுபட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறுசீரமைப்பு வாக்காளர் பட்டியல் இன்று அந்தந்த மாவட்டங்களில் வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: தாயால் தாக்கப்பட்ட குழந்தை - வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details