சென்னை: இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மொத்தம் 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையினை ஜனவரி 26 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் வரும் 19 அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஜனவரி 28 முதல் இறுதி நாளான பிப்ரவரி 4 வரை மொத்தம் 74.416 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலைப் பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் விதிமுறையைப் பின்பற்றாமல் இருந்ததால், தூத்துக்குடி மாவட்டத் தேர்தல் அலுவலகம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆகியோரின் அறிக்கையின்படி, தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் 33 வேட்புமனுக்கள் பெறப்பட்டது.