தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரசாயன திரவத்தை குடித்த சிறுமி: சிகிச்சைக்காக ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி - செங்கேட்டையைச் சேர்ந்த சிறுமி

செங்கோட்டையைச் சேர்ந்த சிறுமி இசக்கியம்மாள் தவறுதலாகத் துணி வெளுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயன திரவத்தை குடித்ததன் காரணமாகத் தொடர் சிகிச்சைக்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

ராசயன திரவத்தை குடித்த சிறுமியின் உடல்நிலை தேற்றம்
ராசயன திரவத்தை குடித்த சிறுமியின் உடல்நிலை தேற்றம்

By

Published : Dec 4, 2021, 8:14 AM IST

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (டிசம்பர் 3) ஸ்டாலினை செங்கோட்டையைச் சேர்ந்த சிறுமி இசக்கியம்மாளின் பெற்றோர் எஸ். சீதாராஜ் - பிரேமா ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது, தனது மகள் துணி வெளுப்பதற்கு உபயோகிக்கும் ரசாயன திரவத்தைத் தவறுதலாகக் குடித்ததால், உணவுக்குழாய் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்ற நிலையில் இருப்பதை அறிந்து, ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெரிய அரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது உடல்நலம் தேறிவருவதற்கு நன்றி தெரிவித்தார்கள்.

முதலமைச்சர் சிறுமி இசக்கியம்மாள் தொடர் சிகிச்சைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கி, அச்சிறுமியிடம் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

மருத்துவர்களுக்குப் பாராட்டு

மேலும், சிறுமி இசக்கியம்மாளுக்கு அரிய அறுவை சிகிச்சையைச் சிறப்பான முறையில் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்ட எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எஸ். எழிலரசி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் ஆர். வேல்முருகன், அறுவை சிகிச்சை வல்லுநர் பேராசிரியர் ஆர். செந்தில்நாதன், செவிலியர் ஜி. ஆர்த்திபிரியா, ஆர். காயத்திரி ஆகியோருக்கு ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துறையின் முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர். நாராயணபாபு, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:12 எம்பிக்கள் சஸ்பெண்ட், மாநிலங்களவை ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details