சென்னை: நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியில் போட்டியிட்டது. ஆறு தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட விசிக, நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று (மே.11) கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டமும் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், விசிக சட்டப்பேரவை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.