கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும், மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கரோனா பாதுகாப்பு மையம் மற்றும் மருத்துவமனையில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலை அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு அரசு வழங்கும் உணவு பட்டியல்
சென்னை: கரோனா நோயாளிகளுக்கு அரசு வழங்கும் உணவு பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு அரசு வழங்கும் உணவு பட்டியல்
கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல்:
கால வேளை | நேரம் | உணவுப்பொருள் |
காலை | 7.00 மணி | இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கின்றனர். |
காலை | 8.00 மணி | இட்லி, சாம்பார், வெங்காயச் சட்னி, சம்பா ரவை கோதுமை உப்புமா அல்லது கிச்சடி, வேகவைத்த முட்டை மற்றும் பால் வழங்கப்படுகின்றன. |
காலை | 10.00 மணி | சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்படுகிறது. |
மதியம் | 11 மணி | வெள்ளரிக்காய் சாலட் மற்றும் இஞ்சியை தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டித் தருகின்றனர். |
மதியம் | 1.00 மணி | 2 சப்பாத்தியுடன் புதினா சாதம் அல்லது வெஜிடபிள் சாதம், வேகவைத்த காய்கறிகள், கீரை, மிளகு ரசம், உடைத்த கடலை வழங்கப்படுகிறது. |
மாலை | 3 மணி | மிளகு, மஞ்சளுடன் உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்த தண்ணீரும் வழங்கப்படுகிறது. |
மாலை | 5 மணி | பருப்பு சூப், சுண்டல் கொடுக்கின்றனர். |
இரவு | 7 மணி | 2 சப்பாத்தி, சம்பா ரவை கோதுமை உப்புமா அல்லது கிச்சடி, காய்கறிகள் குருமா, வெங்காயச் சட்னி, பால் கொடுக்கப்படுகின்றன. |
இரவு | 9 மணி | இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டித் தருகின்றனர். |
இரவு | 11 மணி | மிளகு மற்றும் மஞ்சளுடன் உப்பு சேர்த்து கொதிக்கவைத்த தண்ணீர் வழங்கப்படுகிறது. |
அதேபோல் அம்மா உணவும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.