தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் - ருசியான ஃபுல் மெனு விவரம் உள்ளே..! - முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

பள்ளி குழந்தைகளுக்காண முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் முழு உணவுப் பட்டியல் வெளியாகியுள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் - ருசியான ஃபுல் மெனு விவரம் உள்ளே
பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் - ருசியான ஃபுல் மெனு விவரம் உள்ளே

By

Published : Sep 15, 2022, 5:07 PM IST

சென்னை: பள்ளிக்குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(செப்.15) மதுரையில் தொடங்கி வைத்தார். இது தொடர்பான நிகழ்ச்சி மதுரை கீழ அண்ணாதோப்புப் பகுதியில் அமைந்துள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு மெனுவில்:

  • திங்களன்று அரிசி, ரவை, சேமியா, கோதுமை ரவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது;
  • செவ்வாய்தோறும் ரவை, சேமியா, சோளம், கோதுமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் காய்கறி கிச்சடி செய்து தரப்படும்;
  • புதன்தோறும் மாணவர்களுக்கு வெண்பொங்கல் அல்லது ரவை பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்பட உள்ளது;
  • வியாழக்கிழமைகளில் அரிசி, ரவை, சேமியா, கோதுமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் தரப்படும்;
  • வெள்ளிக்கிழமைகளில் ரவை, சோளம், கோதுமை ரவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் காய்கறி கிச்சடி மற்றும் ரவை கேசரி, சேமியா கேசரி தரப்படும்.

மேற்குறிப்பிட்ட உணவுகள் மாணவர்களுக்கு அளிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காலை உணவுத் திட்டம்: சலுகை, தர்மம், இலவசம் என யாரும் எண்ணக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details