தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தி லயன் கிங்' படத்திற்கு டப்பிங் கொடுத்தது வித்தியாசமான அனுபவம்' - ரோபோ சங்கர் - லைன் கிங் படம் டப்பிங்

குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'தி லயன் கிங்' திரைப்படத்திற்கு, நடிகர் ரோபோ சங்கர், அரவிந்த், சித்தார்த் உட்பட பல தமிழ் நடிகர்கள் டப்பிங் செய்துள்ளனர். இதில் நடிகர் ரோபோ சங்கர், டப்பிங் பேசிய அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

நடிகர் ரோபோ ஷங்கர்

By

Published : Jul 9, 2019, 6:02 PM IST

இந்த படத்துல நீங்க டப்பிங் செய்தது உங்களுக்கு பிடித்த டயலாக் எது?

இந்தப் படத்தோட இறுதியில் நான் ஒரு டயலாக் பேசி இருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்த டயலாக். அதாவது, 'பன்றிகள் என்றால் எப்போதுமே ஃபன்னியா (funny) இருக்கும்னு நினைச்சிங்களா டா, ஐ யம் நாட் ஜீரோடா... ஐ யம் ஹீரோ டா' இன்று பேசியது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

ஆங்கில படத்திற்கு குரல் கொடுப்பது கஷ்டமாக இருந்ததா?

இல்லை, எனக்கு எப்பவுமே டப்பிங் என்றால் ஈசியாக தான் இருக்கும். இந்த படத்துல பேசினது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். ஏனென்றால் அந்தக் கேரக்டர் ஒரு இன்னெசன்ட் கேரக்டர். அது எப்பொழுதெல்லாம் வாயைத் திறக்கிறது என்று கவனமாக கவனித்து வாய்ஸ் கொடுத்தேன். நம் தமிழ் படங்களில் டப்பிங் பேசுவது போன்று இதில் பேச முடியாது.

நடிகர் ரோபோ சங்கரின் சிறப்பு நேர்காணல்

தொடர்ந்து ஹாலிவுட் படங்களுக்கு டப்பிங் செய்வீர்களா?
கண்டிப்பா செய்வேன். வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து டப்பிங் குரல் கொடுப்பேன்.

ABOUT THE AUTHOR

...view details