தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொதுமக்களுக்கு எச்சரிக்கை - பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்..! - பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இனைக்க இன்றே கடைசி நாள்

ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணோடு இணைப்பதற்கு இன்றைய தினமே கடைசி நாள் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பொதுமக்களுக்கு எச்சரிக்கை

By

Published : Mar 31, 2022, 4:34 PM IST

பான்கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைப்பெற்று வந்தன. இதனையடுத்து பலமுறை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை வருமானவரித் துறையினர் நீட்டித்துக்கொண்டே சென்றனர்.

இந்த நிலையில் இன்றுடன்(மார்ச்.31) பான் கார்டு எண்ணுடன் -ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும்; அது போன்று இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(மார்ச்.30) மாலை வருமான வரித்துறையின் உயரிய அமைப்பின் மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில், 'இன்றுடன் பான் கார்டு எண்ணுடன் - ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் எண் செயல் இழந்துவிடும். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிக்குள் இணைப்பவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகு இணைத்தால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு - சசிகலா தரப்பு விசாரணை நிறைவு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details