தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்தி சாட்டிலைட் விற்பனையில் சாதனை படைத்த லிங்குசாமியின் 'RAPO 19' - சென்னை செய்திகள்

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் 'RAP0 19' படம் 50 சதவிகிதம் முடிந்துள்ளது.

இந்தி சாட்டிலைட் விற்பனையில் சாதனை படைத்த லிங்குசாமியின் 'RAPO 19'
இந்தி சாட்டிலைட் விற்பனையில் சாதனை படைத்த லிங்குசாமியின் 'RAPO 19'

By

Published : Aug 11, 2021, 10:35 PM IST

தமிழ் வெற்றிப்படங்களான ஆனந்தம், ரன், சண்ட கோழி, பையா உள்ளிட்ட படங்களை இயக்கிய N. லிங்குசாமி, 'RAP019' படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'RAP0 19' படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, ஆதி வில்லனாக நடிக்கின்றார். நதியா, ஜெய பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கில்..

பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள ராம் பொத்தினேனி சமீபத்தில் வெளியான Ismart Shankar, ரெட் என தொடர் வெற்றிகளை தெலுங்கில் கொடுத்துள்ளார்.

இயக்குநர் லிங்குசாமி, நடிகர்கள் ராம் பொத்தினேனி, ஆதி ஆகியோர் குழுவில் உருவாகும் இப்படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ரூ. 16 கோடிக்கு வாங்கியுள்ளது.

நடிகர் ராம் பொத்தினேனி நடித்த படங்களில் அதிக விலைக்கு ஹிந்தி சாட்டிலைட் விற்கப்பட்ட படம் என்ற பெருமையை 'RAPO 19' திரைப்படம் பெற்றுள்ளது. மேலும், இப்படத்தின் தமிழ் சாட்டிலைட் உரிமையைப் பெற பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் அதன் விவரம் வெளியிடப்படும்.

RAPO 19

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்துள்ளது. பிரமாண்டமான முறையில் பெரும் பொருள் செலவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழ்நாடு உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 'சீனு ராமசாமியின் இடி முழக்கம்!'

ABOUT THE AUTHOR

...view details