தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சூர்யாவுக்கு தயார் செய்த கதையை தெலுங்கில் எடுக்கும் லிங்குசாமி!

இயக்குநர் லிங்குசாமி, நடிகர் சூர்யாவுக்கு தயார் செய்திருந்த கதையை தெலுங்கில் படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

lingusamy
lingusamy

By

Published : Jul 8, 2021, 4:44 PM IST

தமிழ் திரைப்பட உலகின் பிரபலமான இயக்குநர் லிங்குசாமி. இவர் 2013ஆம் ஆண்டில் சூர்யாவுக்கு தயார் செய்த கதையை, தெலுங்கு நடிகரை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிங்குசாமிக்கும், சீமானுக்கும் பிரச்னை

இயக்குநர்கள் சங்கத்தின் அறிக்கை

தமிழில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் லிங்குசாமி தெலுங்கில் புதிய படம் இயக்குகிறார். தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நடிக்க உள்ளனர். இப்படம் 2013ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கவிருந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு லிங்குசாமிக்கும், சீமானுக்கும் படத்தின் கதை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.

இயக்குநர்கள் சங்கத்தின் அறிக்கை

லிங்குசாமியின் கதை ஏற்கெனவே நான் எழுதியிருந்த 'பகலவன்' படத்தின் கதை என சீமான், இயக்குநர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த பிரச்னை, சங்கத்தின் மூலம் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு கதையும் ஒரே சாயலில் இருந்தாலும் இது இருவருக்குமே தெரிந்து நடக்கவில்லை என்று கண்டறியப்பட்டது.

தெலுங்கு நடிகரை வைத்து படம்

இயக்குநர்கள் சங்கத்தின் அறிக்கை

தமிழ் தவிர இதர மொழிகளில் இக்கதையை எடுக்க லிங்குசாமிக்கு தடையில்லை என்று சங்கம் அறிவித்தது. அதனால் தமிழில் சூர்யாவை வைத்து எடுக்க இருந்த இந்த கதையை விட்டுவிட்டு 'அஞ்சான்' படத்தை எடுத்தார் லிங்குசாமி. தற்போது பிரச்சினை முடிந்து தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்குவதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இயக்குநர்கள் சங்கத்தின் அறிக்கை

இதையும் படிங்க:''கேஜிஎஃப் 2' தமிழ் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய ட்ரீம் வாரியர்ஸ்!'

ABOUT THE AUTHOR

...view details