தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம்! - Chennai High Court Chief Justice

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டுவரும் மாணவர்கள் தொடர்பான விவகாரத்தில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்து நீதிமன்றத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதால் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Sep 14, 2020, 8:37 AM IST

Updated : Sep 14, 2020, 9:23 AM IST

சென்னை:நீதிமன்றத்தை விமர்சனம் செய்யும் வகையில் கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.

நீதிமன்றம் உயிருக்குப் பயந்து காணொலியில் விசாரணை நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சூர்யா வெளியிட்ட அறிக்கை குறித்த தனியார் தொலைக்காட்சி செய்தியை மேற்கோள்காட்டி, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். அதில், "உயிருக்குப் பயப்படும் நீதிமன்றம், மாணவர்களைத் தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
சூர்யாவின் கருத்து நீதிமன்ற மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது.

நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், அவரின் கருத்து அமைந்துள்ளது. எனவே, சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து, இந்திய நீதித் துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்" என அந்தக் கடிதத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Sep 14, 2020, 9:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details