நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கும், அதன் பிறகு 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வங்கி பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்'
சென்னை: கரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறையில் வங்கித் துறை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்து இந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
இதனிடையே, கரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறையில் வங்கித் துறை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில், கரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறையில் வங்கித் துறை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், பெருந்தொற்று காலத்திலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிய முன்களப் பணியாளர்களின் பட்டியலில் வங்கி பணியாளர்களையும் சேர்க்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.