சென்னை தியாகராய நகரில் உள்ள பி.டி. தியாகராயர் அரங்கில் தமிழ்நாடு வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வணிகவரித் துறை அலுவலர்கள் மற்றும் வணிகர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், வணிக வரித்துறை முதன்மை செயலாளர் எம்.ஏ. சித்திக், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை': வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி
சென்னை: வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி கூறுகையில், "வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக ஆன்லைன் பதிவு நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'நான்கு மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு'