தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்த லீலாவதி மரணம் - அதிமுகவினர் அஞ்சலி - Leelavathi who donated kidney to MGR passed away

உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதியின் உடலுக்கு முனனாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

லீலாவதி
லீலாவதி

By

Published : Nov 26, 2021, 6:30 PM IST

Updated : Nov 26, 2021, 7:16 PM IST

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி (72).

இவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (நவ.26) அதிகாலை 2.06 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு ஹேமலதா (53), மினி (52) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம்

லீலாவதி உடலுக்கு மரியாதை செலுத்திய ஜெயக்குமார், வளர்மதி

1984ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள புரூக்கிளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாமாக முன் வந்து தன்னுடைய ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்தவர் லீலாவதி.

லீலாவதிக்குப் பலர் மரியாதை

அதன் பிறகு, 37 ஆண்டுகளாக ஒரு சிறுநீரகத்துடன் லீலாவதி வாழ்ந்து வந்தார்.

கடந்த சில நாள்களாக சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று (நவ.25) மாலை ஐந்து மணியளவில் வீடு திரும்பிய அவர், இன்று அதிகாலை இரண்டு மணியளவில் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

இரங்கல்

அவரது மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, சைதை துரைசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:எம்ஜிஆரின் மூத்த சகோதரர் மகள் லீலாவதி காலமானார்

Last Updated : Nov 26, 2021, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details