சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, மயிலாடுதுறை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 17 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை
இந்த நிலையில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.10,11 ஆகிய இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தொடர் மழை... 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...