சென்னை:அயனாவரம் அம்பேத்கர் நகர் 2ஆவது தெருவை சேர்ந்தவர் அஜய் (22). இவர் ஆந்திரா கடப்பாவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் தொலைத்தூர கல்வியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதற்கிடையில் கரோனா சர்வே எடுக்கும் பணியையும் செய்து வருகிறார். இந்த நிலையில் தேர்வு நடைபெற உள்ளதால் கட்டணமான 25,000 ரூபாயை கல்லூரியில் செலுத்த வேண்டுமென அஜய் தனது பெற்றோரிடம் பணத்தை கேட்டு வந்தார்.
ஆனால் பணத்தை ஏற்பாடு செய்யமுடியாமல் அஜயின் பெற்றோர் திணறி வந்தனர். இதனால் மனமுடைந்து போன அஜய் நேற்று(ஜன.26) தற்கொலைக்கு முயன்றுள்ளார்.