சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் வாகனங்களை கண்காணிக்கவும், எண்களை துல்லியமாக பதிவு செய்யும் என்பிஆர் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் திறந்துவைத்தார்.
அதைத் தொடர்ந்து நீலாங்கரை, சாய்பாபா கோயில், கோவிந்தன் நகர் வரையும் 79 சிசிடிவி கேமராக்கள் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்ட டெக்னிஷியன், காவலர்கள்,காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் என அனைவருக்கும் சென்னை கமிஷனர் விஸ்வநாதன் நினைவுப் பரிசினை வழங்கி, உணவு பரிமாறினார்.