தமிழ்நாடு

tamil nadu

ரோந்து வாகனங்களில் புகார் அளிக்கும் வகையில் புதிய திட்டம் தொடக்கம்!

By

Published : Nov 4, 2020, 9:53 PM IST

சென்னை: ரோந்து வாகனங்களில் புகார் அளிக்கும் புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடக்கி வைத்தார்.

காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை பெருநகர காவல்துறைக்கு உள்பட்ட 136 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் என 171 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களுக்கு 355 ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. இதில் முக்கியமான 124 காவல் நிலையங்களை தேர்ந்தெடுத்து அதற்கு உள்பட்ட 124 ரோந்து வாகனங்களில் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பொதுமக்கள் நேரடியாக வந்து புகார் அளிக்கும் புதிய திட்டத்தை சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று (நவம்பர் 4) தொடக்கி வைத்தார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அருண் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

காவல் நிலையங்களுக்கு நேரடியாக வர முடியாதவர்களுக்காகவும், பொதுமக்கள் காவல் நிலையங்களை தேடி வருவதை மாற்றி காவல்துறை பொது மக்களை தேடிச் செல்லும் புதிய முயற்சியாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி குறிப்பிட்ட 124 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பொதுவான இடத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் ரோந்து வாகனம் புகார்களை பெரும் பணியில் ஈடுபடும்.

புகார் அளிக்க வரும் பொதுமக்கள் நேரடியாக ரோந்து வாகனத்தில் உள்ள உதவி ஆய்வாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்து, அதற்கான சிஎஸ்ஆர் என்று சொல்லக்கூடிய சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு வரை ரோந்து வாகனத்தில் சிஎஸ்ஆர் வழங்குவதற்கான அதிகாரம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது ரோந்து வானத்தில் இருக்கும் உதவி ஆய்வாளரே புகாரை பெற்று சிஎஸ்ஆர் வழங்குவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

launch-of-new-scheme

இது குறித்து பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சேவை செய்ய பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருவதாகவும், வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் புகார் பெறுவது, மாவட்ட அளவில் சைபர் காவல் நிலையம், போதை பொருளுக்கு எதிரான தீவிர நடவடிக்கை, திருடு போன செல்போன் மீட்பு பணி, நடந்து சென்று ரோந்து மேற்கொள்ளும் பணி போன்றவை வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக சென்னை முழுவதும் முதல்கட்டமாக 124 ரோந்து வாகனங்களிலேயே மனுதாரர் புகார் அளிக்கும் வகையில், புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், புகார் தன்மை குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய மகேஷ்குமார் அகர்வால், எந்த ஒரு புதிய திட்டத்தையும் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே அந்த திட்டம் வெற்றி பெறும். எனவே, காவல்துறை துணை ஆணையர்கள் கண்காணித்து திட்டம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details