சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் நிலவும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகப்படியாக 31 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 2 செ.மீ மழையும், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், கடம்பூர் மற்றும் நெல்லை மாவட்டம் பாபநாசம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ மழையும் பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.