தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேலைவாய்ப்பு செய்திகள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 191 காலி பணியிடங்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கரோனா தொற்றுக்கு, பின்னர் முதல் முறையாக தடுப்பூசி கிடங்கு ஊழியர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், புள்ளியியல் உதவியாளர் பணியிடங்களில் 191 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி, latest govt jobs 2021, Employment News, free job alert, வேலைவாய்ப்பு செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள் 2021, 191 காலியிடங்கள், tnpsc, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், காலி பணியிடங்கள், tnpsc 191 vacancies
வேலைவாய்ப்பு செய்திகள்

By

Published : Oct 20, 2021, 8:53 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் கீழ் தடுப்பூசி கிடங்கு ஊழியர் பணியில் 30 பேர், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 161 பேர், புள்ளியியல் உதவியாளர் பணியில் 2 பேர் என
193 பணியிடங்களில் சேர விரும்புவோர், அக்டோபர் 20ஆம் தேதி முதல் நவம்பர் 19 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும். காலையில் முதல் தாள் தேர்வும், மாலையில் 2ஆம் தாள் தேர்வும் நடைபெறும். காலையில் முதல் தாள் தேர்வு 3 மணி நேரம் 300 மதிப்பெண்களுக்கும், மாலையில் 2 ம் தாள் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் என 500 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

இதில், இட ஒதுக்கீட்டு பிரிவினர் 150 மதிப்பெண்களும், பிற வகுப்பினர் 200 மதிப்பெண்களும் பெற வேண்டும். தேர்வர்கள் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

ABOUT THE AUTHOR

...view details