சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர். .
அப்போது சார்ஜாவிலிருந்து சென்னைக்கு வந்த கடலூரைச் சேர்ந்த பார்த்திபன்(23) என்ற பயணியிடம் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்துள்ளனர். அப்போது முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் தங்கச் சங்கிலி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடமிருந்து ரூ.7 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்புள்ள, 190 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.