இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவர் கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய லாபம் படத்தின் இறுதிகட்ட பணியின்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல் தகனம் - மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல் தகனம்
சென்னை: மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று (மார்ச் 14) காலை காலமானார். அவரது உடல் மயிலாப்பூரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
திரை பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று (மார்ச் 15) காலை நடிகர் விஜய் சேதுபதி மறைந்த எஸ்.பி. ஜனநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள மின்மயானத்தில் எஸ்.பி. ஜனநாதனின் உடல் தகனம்செய்யப்பட்டது.