தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 9, 2019, 8:10 PM IST

ETV Bharat / city

கடந்தாண்டு 27 ஆயிரம் டன் நெகிழிக் கழிவுகள் எரிபொருளாக உபயோகம் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: கடந்தாண்டில் மட்டும் 27 ஆயிரம் டன் நெகிழிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

last year 27 thousand tons of plastic waste was used as fuel

சிமெண்ட் ஆலைகளில் தீங்கிழைக்கும் கழிவுகள், நெகிழிக் கழிவுகள், திடக் கழிவுகள் ஆகியவற்றை அறிவியல் ரீதியாக கையாண்டு சிமெண்ட் ஆலைகளில் நிலக்கரியுடன் எரிபொருளாகப் பயன்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சிமெண்ட் ஆலை நிறுவனங்களுடன் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார். இதில், மேற்கூறிய கழிவுகளை உரிய முறையில் உபயோகிக்க சிமெண்ட் நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கை குறித்து அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் சிமெண்ட் ஆலைகளில் கடந்தாண்டு மட்டும் 65 ஆயிரம் டன் தீங்கிழைக்கும் கழிவுகளும் 27 ஆயிரம் டன் நெகிழிக் கழிவுகளும் 13 ஆயிரம் டன் நகராட்சி திடக் கழிவுகளும் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தெரிவித்தார்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் சேகரமாகும் நெகிழிக் கழிவுகளை சிமெண்ட் ஆலைகள் தாங்களாகவே முன்வந்து பெற்றுக்கொண்டு அதை உரிய முறையில் உபயோகிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: தவறவிட்ட பையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த ரயில்வே காவல் துறையினர்!

ABOUT THE AUTHOR

...view details