சென்னை:தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகியப் பணியிடங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 413 இடங்களுக்கு, 10 லட்சத்து 52 ஆயிரத்து 839 பேர் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 60 % பேர் அதிகமாக விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குரூப் 2ஏ பணியிடங்களில் 5ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பைப் பிப். 23 ஆம்தேதி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவர்களுக்கான போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இந்தத் தேர்வுகளுக்கு பிப். 23ஆம் தேதியில் இருந்து, மார்ச் 23ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பம் செய்தவர்கள் தவறுகள் இருந்தால் திருத்தம் செய்யவும் அனுமதி வழங்கியது. மேலும் விண்ணப்பத்திற்கான அறிவிப்பாணையில் தேர்விற்கான முழுத் தகவல்களையும் வழங்கியது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய (மார்ச் 23) இன்று கடைசி நாள். இந்த நிலையில், மதியம் 2 மணி வரையில் சுமார் 10 லட்சத்து 52 ஆயிரத்து 839 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 23ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலைத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகையில் 3 மணி நேரம் நடத்தப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் நேரடி வகுப்புகள்