சென்னை தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கான 30 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவினர் பதவியேற்றுக்கொண்டனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சுப்பா ரெட்டி முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
பின்னர் சேகர் ரெட்டி மற்றும் சுப்பா ரெட்டி கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழ்நாட்டில் இருந்துதான் பக்தர்கள் திருமலைக்கு அதிக அளவு வருகின்றனர். தமிழ்நாடு பக்தர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தர தனியே ஆலோசகர் குழு செயல்படுகிறது.
லட்டு விலையை ஏற்ற தற்போதைக்கு எண்ணமில்லை. சாமானியர்கள் தங்கும் விடுதிக்கான வாடகையிலும் எந்தவித மாற்றமுமில்லை.
திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் பேட்டி சென்னையில் பெருமாள் கோயில் கட்டுவதற்கான கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் கிழக்கு கடற்கரை சாலையில் இடம் ஒதுக்கியுள்ளார். ஆகம சாஸ்திர விதிகளுக்கு ஏற்றவாறு ஆராய்ந்து கோயிலின் இடம் இறுதி செய்யப்படும்' என்றனர்.
இதையும் படிங்க: 'வரும் மார்ச் மாதத்திற்குள் தனியார் கையில் இருபெரும் பொதுத்துறை நிறுவனங்கள்' - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!