நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால் இப்படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளது.
இஸ்லாமிய நாட்டில் பீஸ்ட் படத்திற்கு தடை! - பீஸ்ட் படத்திற்கு தடை
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளது.
பீஸ்ட் படத்திற்கு தடை
இப்படத்தில் வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளதாக கூறி இப்படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளது. குவைத் அரசு மிகவும் கடுமையான சென்சார் சட்டத்தை கொண்ட நாடாகும். விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கு குவைத் அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போன்று குரூப், எப்ஃஐஆர் போன்ற படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கிராமி விருது விழாவில் மகனுடன் ஏஆர்.ரகுமான் - வைரலாகும் புகைப்படம்!
Last Updated : Apr 5, 2022, 7:22 PM IST
TAGGED:
பீஸ்ட் படத்திற்கு தடை