தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் இணைந்து போட்டியிடுகிறது.
நேற்றிரவு (மார்ச் 10) இருக்கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது. இதில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் கும்பகோணம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.