தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
இத்தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, அம்மாநில அரசின் முறையான அனுமதியுடன், படிப்படியாக அனுப்பிவைக்க தமிழ்நாடு அரசு அனைத்துவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்துவருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து இதுவரை, சுமார் 13 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் மே 9ஆம் தேதியன்று அணுமின் நிலைய வாயில் அருகில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு உடனடியாகச் செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர்.