தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கூடங்குளம் அணுக்கழிவு: கருத்துக் கேட்புக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! - kudangalum power plant

சென்னை: கூடங்குளம் அணுக்கழிவு கிடங்கு அமைப்பது தொடர்பாக நடைபெற இருந்த கருத்துக் கேட்புக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம்

By

Published : Jun 20, 2019, 6:26 PM IST

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் அணுக்கழிவுகளைத் தேக்கி வைப்பதற்கான சேமிப்பு கிடங்கு அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details