சென்னை:சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக 'சோனியா காந்தி பேட்மிண்ட்ன் விளையாட்டு போட்டி' நடைபெற்றது. சென்னை சத்தியமூர்த்தி பவனில், போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என 9 பேருக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி விருதுகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தேர்தலில் போட்டியிட அப்போதைய தலைவர் ஜி.கே.மூப்பனார் தனக்கு மூன்று முறை வாய்ப்பு கொடுத்தார். ஆனால், 4-வது முறை வாய்ப்பு வழங்கவில்லை. அதனை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டேன்.
நம் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு நோக்கம் வேண்டும், அது நேர்மறையாக இருக்க வேண்டும். அப்படி உள்ளவர்களுக்கு பூமி ஒரு சொர்க்கம். எனது வாசிப்பு, அறிஞர்களின் கருத்தின் அடிப்படையில் சொர்க்கம் என்பது பூமி மட்டுமே.
தீதும், நன்றும் பிறர்தர வாரா என்பது போல் தான் ஒவ்வொரு செயலுக்கும் பயன் உண்டு என்றார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர்கள் முகத்தில் மகிழ்ச்சி அல்ல; அவர்கள் அடுத்த மன நிலைக்கு சென்று விட்டார்கள். ஆகையால் வாழ்க்கையில் உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்' என பேசினார்.