தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முருகன் கையில் இருக்கும் வேல், பாஜக கைக்கு சென்றால்... - கே.எஸ்.அழகிரி

சென்னை: முருகன் கையில் இருக்கும் வேல் ஒருபோதும் பாஜகவின் கைக்கு சென்றுவிடக் கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

leader
leader

By

Published : Nov 5, 2020, 8:05 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ இந்திய விவசாயமே சீர்கெட்டு போகும் வகையில் மோடி அரசு வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் இடைத்தரகர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும்தான் பலன். இதற்காகவே பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றன.

அதனை முன்னிறுத்திதான் தமிழகத்திலும் ஏர் களப்பை போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். 200 இடங்களில் நடக்க இருக்கும் பேரணியில், ராகுல்காந்தியும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

முருகன் கையில் இருக்கும் வேல், பாஜக கைக்கு சென்றால்...

முருகன் கையில் வேல் இருக்கலாம், ஒருபோதும் அது பாஜகவினர் கைக்கு சென்று விடக்கூடாது. அப்படி சென்றால் அது வன்முறையை தூண்டக் கூடிய ஆயுதமாகிவிடும். மக்கள் மத்தியில் உண்மையான பிரச்சனைகளை மறைக்க மதரீதியான, உணர்வுமயமான விசயங்களை பாஜக கையில் எடுக்கிறது. எனவே, இதனை தடுத்து பாஜகவின் முயற்சியை மழுங்கடிக்க செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி மக்கள் நீதி மய்யம் - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details