தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'க்ரியா' பதிப்பகம் ராமகிருஷ்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த மு. க. ஸ்டாலின் - Ramakrishnan

‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தனது இரங்கலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமகிருஷ்ணன் பதிப்பகம்
ராமகிருஷ்ணன் பதிப்பகம்

By

Published : Nov 17, 2020, 11:48 AM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “தமிழ் பதிப்புலகத்தின் முக்கிய ஆளுமையான 'க்ரியா' பதிப்பகம் ராமகிருஷ்ணன் அவர்கள் கரோனா தொற்றுக்கு இரையாகி உயிரிழந்தார் என்ற செய்தி, தீயாக நெஞ்சில் இறங்கி, தாங்க முடியாத அதிரச்சியையும் வேதனையையும் தருகிறது.

ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட 'தற்காலத் தமிழ் அகராதி', தமிழ் கற்கும் அனைவர்க்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் அரிய கருவூலமாகும்.

பதிப்புப் பணியை தவமாகவே மேற்கொண்டு, முன்னணி எழுத்தாளர்கள் பலருடைய படைப்புகளின் மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டவர். மரணப் படுக்கையிலும், பதிப்புப் பணியை தவறாமல் மேற்கொண்ட அவருடைய தொண்டறத்தைப் போற்றி, அவரது மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈடு செய்ய இயலாத, ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவினால், துயர்ப்படும் குடும்பத்தினர் - உறவினர்கள் - நண்பர்கள் - தமிழ்ப் பதிப்புலகத்தினர் அனைவர்க்கும் எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details