தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின் கட்டண உயர்வு - திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 23இல் ஆர்ப்பாட்டம்; அறிவித்த கிருஷ்ணசாமி - Puthiya Tamilagam Krishnasamy

மின் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வரும் 23ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 14, 2022, 6:50 PM IST

சென்னை: மின் கட்டண உயர்வு தொடர்பாக இன்று (செப்.14) செய்தியாளர்களைச்சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் வரும் 23ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

அப்போது பேசியவர், 'கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் கரோனா முழு ஊரடங்கிற்குப் பிறகு தற்போது தான், பொருளாதாரம் மெல்ல முன்னேறி வருகிறது. ஸ்டீல், சிமெண்ட் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதனைக்கண்டித்து வரும் 22ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், தொடர்ந்து மாவட்டத் தலைநகரங்கள், கிராம ஊராட்சிகளில் வாரம் ஒரு முறை போராட்டங்கள் என மின் கட்டண உயர்வைத் திரும்ப பெறும் வகையில் 4 கட்டப்போராட்டங்கள் நடைபெறும்.

தென்மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்சிகளில் எங்கள் கட்சியினர் பங்கேற்க அனுமதி மறுக்கப்படுகிறது. அரசியல் நடவடிக்கைகளை முடக்க பெரிய அளவில் சதி நடைபெறுகிறது. இவற்றைத்தடுக்க டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துளோம். மேலும், இமானுவேல் சேகரன் நினைவு இடத்தைப் பராமரிக்கும் பொறுப்பு, விழா நடைபெறும் பொறுப்பு ஆகியவற்றை புதிய தமிழகம் கட்சிக்கு அளிக்க வேண்டும் என அரசிடம் என கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ’மக்களுடைய நேரடி பயன்பாட்டிற்கு அரசின் இந்த திட்டங்களும் சென்று சேரவில்லை. சொன்னவை எவையும் நடக்கவில்லை. மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறினால், ஆட்சியை எங்களால் நடத்த முடியவில்லை என்று கூறி ஆளும் திமுக அரசு ஆட்சியை விட்டு விலக வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேனியில் சமூக ஆர்வல சகோதரிகளை கைது செய்யக்கோரி பாஜகவினர் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details