ஊரடங்கால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சென்னையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை சமூக நலக்கூடம் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகிய இடங்களில் தங்க வைத்து, அரசு உணவு வழங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று கோயம்பேடு சந்தைப் பகுதியில் உள்ள அறையில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில இளைஞர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்றும்; எனவே, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கூறி, கோயம்பேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர்.