கோயம்பேடு மார்கெட்டின் இன்றைய காய்கறிகளில் விலை நிலவரம்(07-05-2022) - கோயம்பேடு மார்கெட்டின் இன்றைய காய்கறிகளில் விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், அனைத்து வகையான காய்களின் இன்றைய (மே.07) விலை நிலவரம் குறித்து காண்போம்.
கோயம்பேடு மார்கெட்டின் இன்றைய காய்கறிகளில் விலை நிலவரம்
By
Published : May 7, 2022, 11:44 AM IST
|
Updated : May 7, 2022, 11:59 AM IST
சென்னை:கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோடைகாலம் என்பதால் கிராமப்புறங்களில் நீர் ஆதாரம் குறைவாக இருப்பதால் காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே காய்கறியின் விலை அதிகரித்துள்ளது.
மேலும் கோடை காலம் முடியும் வரை காய்கறி விலை உயர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. தக்காளியை பொருத்தவரை வெயில் அதிகமாக இருப்பதால் தக்காளி கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளியின் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் குறைவாக விற்ற பல காய்கறியின் விலை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக ரூ.10-க்கு விற்பனைசெய்யப்பட்ட தக்காளி இப்போது ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய், புடலங்காய், கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை ரூ.10 உயர்ந்துள்ளது.
இதர காய்கறிகளான பச்சை மிளகாய், கேரட், வெள்ளரிக்காய், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளில் விலையும், சற்று உயர்ந்துள்ளது. மேலும் கிழங்கு வகைகளின் விலை ரூ.5 உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்கெட்டின் இன்றைய காய்கறிகளில் விலை நிலவரம்: