சென்னை: பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ், "கொடநாடு வழக்கை விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைகிறோம்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை நாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே விரைந்து விசாரிக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அந்த வழக்கின் விசாரணையில் தற்போது வரை முடிவு எட்டப்படவில்லை.