சென்னை:சந்திர கிரகணம் கடந்த மே 26ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், வரும் ஜூன் 10ஆம் தேதி, 1.42 மணி முதல் மாலை 6.41மணி வரை சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. இது 2021ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமாக இருக்கும்.
இந்தியாவில், இது வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் ஓரளவு காணப்பட்டாலும், முழு கிரகணத்தை வட அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஐரோப்பாவில் காண முடியும் எனக் கூறப்படுகிறது.