தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரதமருடன் உரையாடிய கிரண் ஸ்ருதி ஐபிஎஸ்-க்கு பதவி! - கிரண் சுருதி

சென்னை: பயிற்சி நிறைவு விழாவில் பிரதமர் மோடியுடன் உரையாடிய கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் திருவண்ணாமலை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

kiran
kiran

By

Published : Sep 23, 2020, 7:11 PM IST

ஐபிஎஸ் பயிற்சி பெற்ற ஏழு பேரை உதவி காவல் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ், உதவி காவல் கண்காணிப்பாளர், வேலூர்.
  • சமய் சிங் மீனா ஐபிஎஸ், உதவி காவல் கண்காணிப்பாளர், வள்ளியூர் துணைப்பிரிவு, திருநெல்வேலி.
  • ஆதர்ஷ் பச்சேரா ஐபிஎஸ், உதவி காவல் கண்காணிப்பாளர், செங்கல்பட்டு.
  • பூக்கியா சினேகா பிரியா ஐபிஎஸ், உதவி காவல் கண்காணிப்பாளர், நெய்வேலி துணைப்பிரிவு, கடலூர்.
  • தீபக் சிவாச் ஐபிஎஸ், உதவி காவல் கண்காணிப்பாளர், ராமேஸ்வரம் துணைப்பிரிவு, ராமநாதபுரம்.
  • ஹர்ஷ் சிங் ஐபிஎஸ், உதவி காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் துணைப்பிரிவு, தூத்துக்குடி.
  • கிரண் ஸ்ருதி ஐபிஎஸ், உதவி காவல் கண்காணிப்பாளர், டவுன் துணைப்பிரிவு, திருவண்ணாமலை.

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேரவும் உத்தரவிடப்படுள்ளது.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவரும், திருவண்ணாமலை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளவருமான கிரண் ஸ்ருதி ஐபிஎஸ், ஹைதராபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாதமியில் பயிற்சி பெற்றவராவார். இவர் உள்பட 131 இளம் ஐபிஎஸ் உயர் அலுவலர்கள் தங்களின் 42 வார பயிற்சியை முடித்திருந்த நிலையில், அவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலமாக அண்மையில் கலந்துரையாடினார்.

அப்போது பிரதமர் மோடியுடன் பேசிய கிரண் ஸ்ருதி, தமிழ்நாட்டில் காவல்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்க, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் குறித்து எடுத்துரைத்தார். காவல்துறையின் அனைத்துப் பிரிவு காவலர்களும், இத்திட்டத்தின் கீழ் நல்ல ஆலோசனைகளைப் பெறுவதாகவும், இதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் குறைவதாகவும் கிரண் ஸ்ருதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘நேர்மையான காவலர்கள்’ என்று கலாய்த்து புகார் மனு: காவல் துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details