சென்னை சைதாப்பேட்டையில் இளைஞர்கள் சிலர் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை பொதுமக்களுக்கு வாட்ஸ்அப் மூலம் விற்பனை செய்து வருவதாக சைதாப்பேட்டை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
சென்னை-வாட்ஸ்அப் மூலம் கேரளா லாட்டரி விற்பனை - இருவர் கைது - Lottery sales
சென்னை: வாட்ஸ் ஆப் மூலமாக தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்றதாக இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
![சென்னை-வாட்ஸ்அப் மூலம் கேரளா லாட்டரி விற்பனை - இருவர் கைது Kerala Lottery Sales through WhatsApp](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-collage-1209newsroom-1599930064-719.jpg)
இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சைதாப்பேட்டை பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சைதாப்பேட்டை சுப்பிரமணியசுவாமி தெருவில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது விஷ்ணு(24), மணிகண்டன்(20) என்பதும், இவர்கள் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனால் இவர்களது செல்போன்களை வாங்கி சோதனை செய்த போது பல்வேறு பொதுமக்களிடம் பணத்தை பெற்று கொண்டு வாட்ஸ் அப் மூலமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது அம்பலமாகியது. இதனால் இவர்களை கைது செய்த காவல்துறையினர் இவர்களிடமிருந்த செல்போன், இருசக்கர வாகனம், 15ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.