தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யோகாசனத்தில் காவிரிப்பூம்பட்டினம் மாணவ- மாணவியர் உலக சாதனை! - kavirippoompattinam student world record in yoga

சீர்காழி அருகே அரசு பள்ளி 100 மாணவ மாணவியர் 12 நிமிடங்கள் 12 வினாடிகள் அசைவின்றி தொடர்ந்து டிராகன் வடிவில் யோகாசனத்தில் அமர்ந்து உலக சாதனை படைத்துள்ளனர்.

யோகாசனத்தில் காவிரிப்பூம்பட்டினம் மாணவ மாணவியர் உலக சாதனை!
யோகாசனத்தில் காவிரிப்பூம்பட்டினம் மாணவ மாணவியர் உலக சாதனை!

By

Published : Apr 18, 2022, 2:26 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி வட்டம் அருகே காவிரிப்பூம்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியின் மாணவ மாணவிகள் இணைந்து யோகாவில் தேசிய சாதனை நிகழ்த்தும் விழா நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பூம்புகார் கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இந்தச் சாதனை முயற்சி நடைபெற்றது.

யோகாசனத்தில் காவிரிப்பூம்பட்டினம் மாணவ- மாணவியர் உலக சாதனை!

இந்த சாதனை முயற்சியை ஆல் இந்தியா புத்தகம் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆய்வு செய்து ஊக்கப்படுத்தினர். இப்பள்ளியைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக 100 மீட்டர் நீளத்திற்கு இணைந்து டிராகன் வடிவில் யோகாசனத்தில் புஜங்காசனம் செய்து 12 நிமிடங்கள் 12 வினாடிகள் அசைவின்றி யோகாசனம் தொடர்ந்தனர்.

மாணவர்களின் சாதனையை தேசிய சாதனையாக அங்கீகரித்த ஆல் இந்தியா புத்தகம் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் சான்றிதழ்கள் மற்றும் அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் பதக்கங்களும் வழங்கி பாராட்டினர்.

இதையும் படிங்க:அசத்திய 6 வயது சிறுமி: யோகாவில் உலக சாதனை

ABOUT THE AUTHOR

...view details