தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'என் உடையைக் கிழித்த போலீஸ்' - டெல்லியில் அவமதிக்கப்பட்ட கரூர் எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டு! - தமிழக பெண் எம்பி டெல்லியில் அவமதிக்கப்பட்ட சம்பவம்

டெல்லியில் இன்று கைது செய்யப்பட்ட கரூர் எம்.பி ஜோதிமணியின் உடையை போலீஸ் கிழித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

என் உடையை கிழித்த போலீஸ்
என் உடையை கிழித்த போலீஸ்

By

Published : Jun 15, 2022, 4:57 PM IST

Updated : Jun 15, 2022, 5:20 PM IST

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராகி வரும் நிலையில், இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்றும் கைது செய்யப்பட்ட கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, தன்னை பெண்ணென்றும் பாராமல் அநாகரிகமாக நடந்து கொண்டதாக காவல் துறையினர் குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'டெல்லி காவல் துறையினர் சட்டத்திற்கு விரோதமாக எனது உடைகளை கிழித்து, ராணுவத்தின் உதவியோடு என்னைக் கைது செய்து, ஒரு மணி நேரமாக எங்கோ அழைத்துச்சென்று கொண்டுள்ளனர். ஒரு மணி நேரமாக தண்ணீர் கேட்டும் தொடர்ந்து தர மறுக்கின்றனர்.

இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகாரளித்துள்ளேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே நரேந்திர மோடியின் ஆட்சியில் இது தான் நிலை என்றால் சாதாரணப் பெண்களுக்கு, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

கரூர் எம்.பி., ஜோதிமணி வெளியிட்டுள்ள இந்த வீடியோவால் தமிழ்நாடு பெண் எம்.பி. டெல்லியில் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் எம்.பி. ஜோதிமணி குண்டுக்கட்டாக கைது

இதையும் படிங்க:கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு விவேகானந்தர் பெயரை சூட்டுக - அண்ணாமலை

Last Updated : Jun 15, 2022, 5:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details