தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜகவை எதிர்த்து வலுவான குரல் ஏன் இல்லை? கமலை விமர்சிக்கும் கரு.பழனியப்பன் - அனிதா

சென்னை: மாநில கட்சிகளை தொடர்ந்து விமர்சிக்கும் உங்களிடமிருந்து ஏன் பாஜகவுக்கு எதிராக வலுவான குரல் இல்லை என இயக்குநர் கரு.பழனியப்பன் கமல்ஹாசனை விமர்சனம் செய்துள்ளார்.

palaniyappan

By

Published : Apr 15, 2019, 1:12 PM IST

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "ஸ்டாலின், ஓபிஎஸ், ஹெச்.ராஜா உள்ளிட்டவர்களின் குரலை கேட்டதும் டிவியை உடைத்துவிட்டு யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என கேட்டுவிட்டு, அப்பா அம்மா சொல்வதுபடிதான் வாக்கு செலுத்துவேன் என்றால் நீட்டால் உயிரிழந்த ஒரு பெண்ணின் (அனிதா) அப்பா அம்மாவிடம் கேளுங்கள் அவர்கள் கூறுவார்கள் யாருக்கு வாக்களிக்கக் கூடாது" என்று பேசியிருந்தார்.

இதனையடுத்து அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தனது முகநூல் பக்கத்தில், ’எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவனுக்குத்தான்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், கமல்ஹாசனின் வீடியோ குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் தனது “கரு நீலம்” யூ ட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், "உங்களது பல வருட திரை வாழ்க்கையில் பொது பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தது இல்லை. ஆனால் தற்போது யாரை எதிர்க்கிறீர்களோ உங்களது தொழிலுக்காக அவர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.

பல வருடங்களாக நீங்கள் பார்த்து பார்த்து உருவாக்கிய மன்றத்தினர் யாரையும் நீங்கள் வேட்பாளர்களாக அறிவிக்கவில்லை. 50 லட்சம் பேருக்கு வேலை தருவேன் என வாக்குறுதி கொடுக்கிறீர்கள். இதே வாக்குறுதியைத்தான் பாஜகவும் கடந்த தேர்தலில் கொடுத்தது. ஆனால் அது ஒரு பொய்யான வாக்குறுதி.

மாநில அரசுகளை தொடர்ந்து எதிர்த்து வரும் உங்களிடமிருந்து, பாஜகவை எதிர்த்து ஏன் வலுவான குரல் வரவில்லை. உங்களது குறும்படம் பிரமாதம்.

அனிதாவின் அப்பா அம்மாவிடம் கேட்டுவிட்டு வாக்கு செலுத்துங்கள் என்று கூறுகிறீர்கள். ஆனால் அனிதா இறந்தபோது உங்களிடம் கேட்டபோது, “இதை திருமாவளாவன் சும்மா விடக்கூடாது” என்றீர்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்கு திருமாவளவன்தான் குரல் கொடுக்கவேண்டும் நான் கொடுக்கமாட்டேன் என்றதன் தொனிதான் உங்களது அன்றைய பேச்சு. ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் திருமாவளவன் குரல் கொடுக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழர் நலனுக்காகவும் அவர் குரல் கொடுக்கிறார்.

அதனால்தான் அனிதாவின் அண்ணன், “எங்களது வாக்கு திருமாவளவனுக்கு என்று கூறியிருக்கிறார். திருமாவளவன் வெல்லவேண்டும் என அனைவரும் நினைக்கிறார்கள். எனவே நீங்கள் தொடர்ந்து வீடியோ வெளியிடுங்கள். அதன்மூலம் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெளிவு பெறுவார்கள்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details