தமிழ்நாடு

tamil nadu

வருமான வரி வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய காங். எம்.பி.யின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

By

Published : Dec 5, 2020, 6:40 AM IST

சென்னை: வருமான வரி வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல்செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Karthi Chidambaram Mp Income tax evasion case, Order reserved mhc
வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய காங்கிரஸ் எம்.பி.யின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், 2015ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் தனக்குச் சொந்தமான சொத்துகளை தனியார் நிறுவனத்துக்கு விற்பனைசெய்துள்ளார். இதன்மூலம் கிடைத்த 7.37 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி, கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமானவரித் துறை 2018இல் வழக்கு தொடர்ந்தது.

சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் தாக்கல்செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. இதை எதிர்த்தும், இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

வருமான வரி வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய காங்கிரஸ் எம்.பி.யின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

அப்போது கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தரப்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், “வருமானவரித் துறை தொடர்ந்துள்ள இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவிக்க வேண்டும்” என வாதிட்டார்.

அதற்கு வருமானவரித் துறை சார்பில் முன்னிலையான வழக்குரைஞர், ”இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல்செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இதையும் படிங்க :எங்கள் சமுதாய பெயரைப் பயன்படுத்தக்கூடாது: வஉசி பேரவையினர் சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details