சென்னை வேளச்சேரியிலுள்ள பிரிட்டோ அகாதெமியில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான கராத்தே போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 5 முதல் 20 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டா போன்ற பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
தி லெஜன்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் கராத்தே: சுமார் 500 மாணவர்கள் பங்கேற்பு - கராத்தே போட்டி
சென்னை: தி லெஜன்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.
கராத்தே போட்டி
மேலும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர் அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள உலக அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார்கள் என்று அமைப்பின் தலைவர் சுதர்சன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உலக சிலம்பாட்ட தலைவர் சுதாகர், எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.