திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலப் பாடப்பிரிவில் அருந்ததி ராய் எழுதிய ' Walking with the Comrades' என்னும் புத்தகத்தில் எழுதிய சில கட்டுரைத் தொகுப்புகளை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான 'அகிலா பாரதிய வித்யார்த்தி பரிஷத்' கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக வைக்கவேண்டாம் என எதிர்ப்புத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி தலைமையிலான குழு, அருந்ததிராய் எழுதிய புத்தகத்தில் மவோயிஸ்ட்களைப் பற்றி குறிப்பிட்டதையும் அதில் இடம்பெற்ற சில கட்டுரைகளையும் நீக்க உத்தரவிட்டது. இது பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
'எதை படிக்கவேண்டும் என ஆட்சியும் அதிகாரமும் முடிவு செய்வது பன்முகத்தன்மையை அழித்துவிடும்'
சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் முதுகலை ஆங்கிலப் பாடப்பிரிவில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரைகள் நீக்கப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனிமொழி
இதுகுறித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி ட்வீட் செய்துள்ளார். அதில்,'ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது, ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்' என கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு முன்வரவேண்டும்- கனிமொழி
Last Updated : Nov 12, 2020, 9:53 AM IST