தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோடநாடு கொலை வழக்கு - கனகராஜின் சகோதரர் உள்பட இருவர் கைது - கனகராஜின் சகோதரர் உள்பட இருவர் கைது

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோடநாடு கொலை வழக்கு
கோடநாடு கொலை வழக்கு

By

Published : Oct 25, 2021, 10:48 PM IST

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது இறப்பு குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், அவரது நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பாமக பிரமுகர் வெட்டிக் கொலை - பகீர் சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details