தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காமராஜர் நகர் இடைத்தேர்தல்: புதிய தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்!

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு புதிதாக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் அறிவித்துள்ளார்.

Kamaraj Nagar By Election

By

Published : Oct 6, 2019, 6:09 AM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலைக் கண்காணிக்க மத்திய தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையைப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ”தேர்தல் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகத் தேர்தல் கணக்கு, செலவினம், விதி மீறல்கள், வேட்பாளர்களின் தினசரி தேர்தல் கணக்குகளைக் கண்காணிப்பது ஆகியவற்றிற்கு தேர்தல் பொதுப் பார்வையாளராக சுபாஷ் தும்பரேவும், செலவின பார்வையாளராக ரோகித் இந்தோராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப் பார்வையாளர் சுபாஷ் தும்பரே ,செலவின பார்வையாளராக ரோகித் இந்தோரா

இதையடுத்து, பொதுப் பார்வையாளர் சுபாஷ் தும்பரேவின் அலுவலகம், ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லம் எண் இரண்டில் உள்ளது. அவரது தொடர்பு எண்கள் 8903458925, 0413-2270121. இந்த எண்களில் காலை 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை தொடர்புகொண்டு தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புதிய தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

இதனைத் தொடர்ந்து, செலவின பார்வையாளர் ரோகித் இந்தோராவின் அலுவலகமும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லம் எண் இரண்டில்தான் உள்ளது. இவரது தொடர்பு எண் 9442773587.

மேலும் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் விதிமீறல்கள் மற்றும் புகார்கள் ஏதேனும் இருந்தால் தேர்தல் பார்வையாளர்களைச் சந்தித்து நேரில் தெரிவிக்கலாம்”. இவ்வாறு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்’

ABOUT THE AUTHOR

...view details