டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விவசாய அணி மாநில செயலாளர் தலைமையில், மகளிர் அணி மாநில செயலாளர் மூகாம்பிகா மற்றும் பத்து பேர் கொண்ட குழு இன்று(டிச.6) காலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்களோடு தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் செல்லமுத்துவும் சென்றுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் - மக்கள் நீதி மய்யம் ஆதரவு! - dilli chalo protest
சென்னை: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் குழு ஒன்று டெல்லி சென்றுள்ளது.
மக்கள் நீதி மய்யம் ஆதரவு
மேலும், போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை தெரிவிக்கும் படி டெல்லி சென்ற குழுவிடம் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.