தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்த முறையாவது குற்றவாளிகளுக்கு வாக்களிக்காதீர்கள்- கமல்ஹாசன் - makkal nithi maiyam

சென்னை: சிறைக்கு சென்றவர்கள், செல்லவுள்ளவர்கள், சிறை சென்று வந்தவர்களுக்குதான் நீங்கள் வாக்களிக்கிறீர்கள், அதனால் இந்த முறை சிந்தித்து வாக்களியுங்கள் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kamalhassan election campaign in chennai

By

Published : Apr 16, 2019, 7:56 PM IST

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, பூவிருந்தவல்லி மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் மநீம வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டை கொள்ளைப்புறமாக மாற்ற முயற்சி செய்கின்றனர். ஆனால் இந்தியாவின் தலைநகராக தமிழகம் மாறும். இந்த சிறுக்கூட்டத்தை அடக்கி விடலாம் என வெள்ளையர்களை போல கொள்ளையர்களும் நினைக்கிறார்கள் என கூறினார்.

இப்போதாவது சிந்தித்து வாக்களியுங்கள் -கமல்ஹாசன் அறிவுரை!

ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் டெல்லியிலும் இருக்கிறார்கள். இன்று தண்ணீரை விற்பவர்கள் நாளை காற்றையும் விற்பார்கள் என கடுமையாக கமல்ஹாசன் விமர்சித்தார்.

ABOUT THE AUTHOR

...view details