சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை நாளை திருச்சியிலிருந்து தொடங்குகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற பெயரில் பரப்புரை செய்து வருகிறார். முதல் கட்டப் பரப்புரையை டிச.,13ஆம் தேதி தென்தமிழ்நாட்டிலிருந்து தொடங்கிய கமல்ஹாசன், இரண்டாம் கட்ட பரப்புரையை டிச.20ஆம் தேதி காஞ்சிபுரம், விழுப்புரம் மண்டலங்களில் மேற்கொண்டார். இந்த நிலையில், கமல்ஹாசன் தனது மூன்றாம் கட்ட பரப்புரையை நாளை மாலை தொடங்கி 30ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பரப்புரை மேற்கொள்ளுகிறார்.